
சாரதா
பீடம் மற்றொரு சக்தி பீடம் ஆதி சங்கரரால் விவரிக்கப்பட்டுள்ள 18 மகா
சக்தி பீடங்களில் உள்ளது. இது இப்போது பாகிஸ்தானால் கையக
ப்படுத்தப்பட்டுள்ள (POK ) காஷ்மீரப் பகுதியில் உள்ளது . இத் திருக்கோயில்
உள்ள இடம் தேவியின் வலது கை விழுந்த இடம் என வர்ணிக்கப்படுகிறது. இன்று
மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. அனால் ஒரு காலத்தில் இங்குதான் ஒரு
பெரிய சமஸ்க்ருத நூலகம் இருந்திருக்கிறது.. இன்று "பாரமுல்லா" விலிருந்து
96 கி மீ தொலைவில் "நீலம்" பள்ளத்தாக்கில் 11000 அடி உயரத்தில் உள்ள இந்த
பீடம் உள்ள இடமே சாரதா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சீன யாத்ரிகர்
"யூவன் சாங்" சி.632ல் இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார் .
மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் "அல் பருனி " மற்றும் அக்பரின் அமைச்சர் "அபுல்
பாசல்" அவர்கள் சாரதா பீடத்தை தங்கள் எழுத்துக்களில்
குறித்திருக்கிறார்கள். ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் இங்கு வந்து
இருந்ததாக கூறப்படுகிறது. சமீப காலம் வரை இந்த இடம் கஷ்மிர பண்டிதர்களின்
முக்கிய இருப்பிடமாக இருந்தது. இவ்வளவு பிரபலமான சக்திபீடத்தில் இன்று
ஓரிரு ஹிந்துக்களே உள்ளனர் என்பது வருத்தப்படகூடிய செய்தியாகும். ஆனால்
சமீப காலத்தில் தங்கள் கலாசாரத்தில் பற்றுள்ள சில கஷ்மீர இஸ்லாமிய
சகோதரர்கள் இத்தலத்தை புதிப்பிக்க அரசாங்கத்துடன் கலந்து முயற்சி
எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக